September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாமகள் புலமைப்பரிசில் சாதனையாளர்க்கு உபதவிசாளரின் கௌரவம் 

நாமகள் புலமைப்பரிசில் சாதனையாளர்க்கு உபதவிசாளரின் கௌரவம் 

( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி  ஏழாம் கிராமம் நாமகள்வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5புலமைப் பரிசையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் அதிக புள்ளிகளை எடுத்த மாணவியை கெளரவிக்கும் நிகழ்வு  , நேற்று பாடசாலை ஆசிரியர் கே.கண்ணதாசன் ஏற்பாட்டில், பாடசாலையில் அதிபர் எஸ்.தவேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

வெட்டு புள்ளிக்கு மேல் எடுத்த  ந. அர்த்திக்கா  என்ற மாணவி கெளரவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அதேவேளை 70 புள்ளிகள் எடுத்த மாணவர்களையும்கெளரவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கே.புவனரூபன் தான் பதவியேற்ற காலம் முதல் தனது மாதாந்த கொடுப்பனவை பொதுமக்கள் சமூக சேவைக்காக வழங்கி வருகிறார்.

அந்த வகையில் தனது 7வது மாத கொடுப்பனவை நாவிதன்வெளி புலமைப் பரிசில் சாதனை மாணவர்கள் அனைவருக்குமாக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *