செல்லையா பேரின்பராசா.
ஆசிரியப் பபணியை அறப்பணிப்யாக மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நாமம் அவர்கள் வாழும் காலத்திலும் பணி ஓய்வின் பின்னரான காலத்திலும், அவர்கள் மரணித்த பின்னரும் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கும். இந்த வரிசையில் எமது விஞ்ஞான பாட ஆசிரியை திருமதி சுனீத்திரா புட்பமூர்த்தி உள்ளமை பெருமைக்குரிய விடயமாகும். என்று அதிபர் பேரின்பராசா ரேகாசலன் குறிப்பிட்டார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள
எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தில் விஞ்ஞானபாட ஆசிரியையாக பணியாற்றி ஆசிரிய சேவையில்38 வருடங்களை நிறைவாக்கி இச் சேவையில் இருந்து இளைப்பாறும் திருமதி சுனீத்திரா புட்பமூர்த்திக்கான ” பிரிந்தும் பிரியா நிகழ்வு ” இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் தலைமையில் (05.09.2026) சனிக்கிழமை இடம்பெற்ற போது இந் நிகழ்வுக்குத் தலைமை வகித்த அதிபர் பேரின்பராசா ரேகாசலன் அங்கு மேலும் பேசுகையில்.
ஆசிரியத்துவம் கூறும் அத்தனை பண்புகளையும் உள்வாங்கி உண்மைத்துவமும் உயிரோட்டமும் உள்ள அர்ப்பணிப்பும் தியாகமும் மேலாக நேர முகாமைத்துவத்துடன் பாடசாலை சமூகத்தையும் அரவணைத்து கல்விப் பணியை அறப்பணியாக மேற்கொண்ட இவ் ஆசிரியை தொட்ட பணிகளைத் துலங்க வைத்தத முன்மாதிரி.
கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் இணைக் கலைத்திட்ட மேம்பாட்டுக்காககவும் உழைத்தத முன்மாதிரியான ஆசிரியையாகவும் விளங்கினார். கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பதற்கமைய புகழ் பூத்த அதிபர் புட்பமூர்த்தியை கடிமணம் செய்து இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட நல்லாசிரியை இவராகும் .
இத்தகைய சிறப்புக்களையுடைய இவ் ஆசிரியையின் மாணவர்கள் உலகப் பரப்பில் உயர்வான இடங்களில் உள்ளமை இவரின் அர்ப்பணிப்பான சேவையின் அடையாளமாகும் என்றார்.
இவ்விழாவில் விழா நாயகிக்கு பொன்னாடை போர்த்தி பா வாழ்த்துமடல் மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.




