November 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையில் இன்று சத்தியசாயி பாபாவின் 101 வது பிறந்தநாள் சிறப்பு வழிபாடு 

ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலையில் இன்று சத்தியசாயி பாபாவின் 101 வது பிறந்தநாள் சிறப்பு வழிபாடு 

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான்குளம் ஸ்ரீ சத்திய சாயி சஞ்சீவினி வைத்தியசாலை நடாத்திய பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 101 வது பிறந்தநாள் நிகழ்வின் சிறப்பு வழிபாடு ஆராதனை பொது முகாமையாளர் டேவிட் சில்வெஸ்ரர் தலைமையில் நேற்று (23) திங்கட்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

 பகவான் ஸ்ரீ  சத்திய சாயி பாபாவின் 101 வது பிறந்தநாள் நேற்று (23) திங்கள் கிழமை ஆகும்.

101 வது பிறந்தநாளையொட்டி முதலில் பிறந்த நாள் ஆராதனை வழிபாடு வைத்தியசாலை உத்தியோகத்தர் பிரதீபனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. பிறந்தநாள் கேக் வெட்டலும் இடம்பெற்றன.

நிகழ்வில் வைத்தியசாலை கணக்காளர் எஸ் பிரேம்குமார், சமூக செயற்பாட்டாளர்களான வி.ரி.சகாதேவராஜா, கே.ஜெயசிறில், மட்டக்களப்பு லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் ரி.ஆதித்தன் தலைமையிலான பிரதிநிதிகள் மற்றும் சாயி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *