ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் ஏற்பாட்டில், 25 வருட ஊடகப் பாரம்பரியத்தைக் கொண்ட ‘தினச்சுடர்’ பத்திரிகையின் ‘தினச்சுடர் தேசிய விருது – 2026’ வழங்கும் விழா இன்று (21.11.2026) சனிக்கிழமை மாளிகைக்காடு மேற்கில் அமைந்துள்ள பாவா றோயல் மண்டபத்தில் (Bawa Royale Hall) வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதன்போது, பிராந்தியத்தின் முக்கிய செய்திகளையும், சமூகப் பிரச்சினைகளையும் துணிச்சலுடனும், பொறுப்புணர்வுடனும் வெளிக்கொணர்ந்து வரும் பிரபல சிரேஷ்ட புலனாய்வு ஊடகவியலாளர் பாரூக் சிஹான் (Farook Sihan) அவர்களின் ஊடகத்துறைப் பணிகளையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, ‘தினச்சுடர் தேசிய விருது – 2026’ மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
கலாபூஷணம் கலாநிதி முபாரக் மஜீத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட கௌரவ அதிதிகளின் கரங்களினால் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.
ஊடகத்துறையில் தனது தனித்துவமான பங்களிப்பினாலும், துணிச்சலான செய்திப் பணிகளினாலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரூக் சிஹான் அவர்கள், ‘தினச்சுடர் தேசிய விருது – 2026’ பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்விருதைப் பெற்றுக்கொண்ட அவருக்கு கல்முனைநெற் (Kalmunainet) ஊடகத்தின் சார்பில் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது ஊடகப் பணி மேலும் சிறக்கவும், பல்வேறு உயரிய விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிடவும் வாழ்த்துகின்றோம்.