November 22, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > உலக இகிமி துணைத் தலைவர் கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு

உலக இகிமி துணைத் தலைவர் கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா)

 அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் உபதலைவர்களில் ஒருவரான அதிவணக்கத்திற்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜி மகாராஜ் அவர்கள், கொட்டகலை ராமகிருஷ்ண மிஷனின் சிவானந்த நலன்புரி நிலையத்திற்கு நேற்று  வெள்ளிக்கிழமை(20)விஜயம் செய்தார்கள்.

கொழும்பு ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவரான ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு நிறைவு விழாக்களின் ஒரு பகுதியாக, கொட்டகலை சிவானந்த நலன்புரி நிலையத்தில் சிறப்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு மட்டக்களப்பு இகிமிசன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீயினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்களும் மாணவச் செல்வங்களும் கலந்துகொண்டு, சுவாமிஜி அவர்களின் அருளுரையையும் ஆசியையும் பெற்றுச் சிறப்பித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *