November 22, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > துறைநீலாவணையில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா.

துறைநீலாவணையில் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா.

செல்லையா பேரின்பராசா

துறைநீலாவணை பொது நூலக வாசகர் வட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையுடன் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 19.11.2026 வியாழக் கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

துறைநீலாவணை பொது நூலக வாசகர் வட்டத் தலைவரும்,  ஓய்வுநிலை அதிபருமான செல்லையா பேரின்பராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் பிரதம அதிதியாகவும், பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன் கௌரவ அதிதியாகவும், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கோமதி இளங்கீரன்,   விசேட அதிதியாகவும், தேசிய கல்வி நிறுவக முன்னாள் தமிழ்த்துறை பணிப்பாளர் செல்வி.வ.விஜயலெட்சுமி, துறைநீலாவணை மகாவித்தியாலய பிரதி அதிபர் இ.லிங்கநாதன் ஓய்வுநிலை ஆசிரியர் க.சின்னத்தம்பி துறைநீலாவணை பொது நூலக உதவியாளர் திருமதி மோஜிதா கவிதாஸ், நாவிதன்வெளி பிரதேச சபை நூலகர் கோ.பிரசன்னா ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இவ் விழாவில் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என்பவற்றில் பங்குபற்றி வெற்றியீட்டிய நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கிப்பட்டனர்.சிறந்த வாசகருக்கான பரிசு கி.ஆறுமுகத்திற்கு வழங்கப்பட்டது.மாணவிகளின் நடனங்களும் இடம்பெற்றது.இவ் விழா நிகழ்வுகளை பொறியியலாளர் த.முகுந்தன் அழகுற தொகுத்து வழங்கினார்.

புகைப்படங்களை இந்த இணைப்பில் பார்வையிடலாம்

https://www.facebook.com/share/p/1eRPsf9SMY

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *