புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண கலாசார மத்திய நிலையங்களுக்கிடையிலான பிரதேச சங்கீத, நடனப் போட்டிகள் கடந்த 03.10.2029 அன்று செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றன.
இதில் கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
நடனப் போட்டிகளில்:
கீர்த்தனம் – 3ஆம் இடம்
கண்ணகி வழக்குரை – 1ஆம் இடம்
றபான் நடனம் நடனம் – 2ஆம் இடம்
பொலல்டி நடனம்நடனம் – 3ஆம் இடம்
சங்கீதப் போட்டிகளில்:
கனிஷ்ட பிரிவு – 1ஆம் இடம்
சிரேஷ்ட பிரிவு – 1ஆம் இடம்
திறந்த பிரிவு – 1ஆம் இடம்
சிரேஷ்ட பிரிவு – மிருதங்கம் – 1ஆம் இடம்
இவ்வெற்றியைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த சங்கீத வளவாளர் திருமதி புலனேஸ்வரி ஜெயகணேஸ் மற்றும் நடன வளவாளர் திருமதி சர்மினி சுதாகரன் ஆகியோருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் களுவாஞ்சிகுடி சப்தஸ்வரா இசைக் கல்லூரி நிலைய மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
சங்கீதப் போட்டிகளில்:
2ஆம் இடம்
இவ்வெற்றியைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவித்த சங்கீத வளவாளர் விதுஷன் சர்மா பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன
அத்துடன், போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்முனை நெற்றின் பாராட்டுக்கள்





