குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளால் ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரது சிறைத்தண்டனையை அமுல்படுத்துவதற்காக முன்னதாகவே திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டதன் அடிப்படையில் ஞானசார தேரருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது