October 6, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மூன்று தினங்கள் சிறப்பாக நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக 30 வது பொதுப் பட்டமளிப்பு விழா !

மூன்று தினங்கள் சிறப்பாக நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக 30 வது பொதுப் பட்டமளிப்பு விழா !

மூன்று தினங்கள் சிறப்பாக நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழக 30 வது பொதுப் பட்டமளிப்பு விழா !
வேட்டியுடன் வேந்தர் மௌனகுரு கைகூப்பி வரவேற்று 2369 பேருக்கு பட்டங்களை வழங்கினார்!!

( வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழா கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று நேற்று (5) திங்கள் கிழமை நிறைவடைந்தது.

கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் முன்னிலையில், ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்ட வேந்தர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் ஆரம்பமானது.

பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு அம்சங்களுடன் மங்கள பேரிகைகள் முழங்க வரவேற்பு இடம்பெற்றது. அந்த வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. பட்டதாரிகள் பெற்றோர்கள் கல்வியியலார்கள் பல்கலைக்கழக உயரதிகாரிகள் என வளாகம் களைகட்டியிருந்தது.

புதிய வேந்தர் பேராசிரியர் சின்னையா மௌனகுரு பாரம்பரிய கலாச்சார வேட்டி வாலாமணி பச்சைநிற கரையுடன் கூடிய சால்வை அணிந்து அனைவரையும் கைகூப்பி வரவேற்று 2369 பேருக்கும் பட்டங்களை வழங்கியமை இங்கு ஈண்டு நோக்கத்தக்கது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன சிறப்பு பேராளராக கலந்து சிறப்பித்தார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின், பேராசிரியர் த. வரகுணம் நினைவு மண்டபத்தில் முதன் முறையாக நடைபெற்றது.

வடக்கு கிழக்கில் எங்குமே இல்லாத 1000 இருக்கைகள் உள்ள குறித்த மண்டபத்தில் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் பொதுப் பட்டமளிப்பு விழா இதுவாகும்.

3,4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சகல பீடங்களையும் சேர்ந்த 2369 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *