2026 ஒக்டோபர் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, கல்முனை பொது நூலகத்தினால் கல்முனை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வாசிப்புப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இந்த வாசிப்புப் போட்டி இன்று 05.10.2026 அன்று காலை 10.00 மணிக்கு கல்முனை பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வுக்கு கல்முனை பொது நூலகத்தின் நூலகர் ஹரிஷா எம். ஏ. காதர் தலைமை தாங்கவுள்ளார்.
இதில் கல்முனை மாநகர சபை கணக்காளர் ஏ. எஸ். மனாசிர் பிரதம அதிதியாகவும், கலாபூஷணம் திரு. ஜே. டேவிட் விசேட அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வு, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை கல்முனை பொது நூலகமும் கல்முனை மாநகர சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
