October 4, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாக தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,750 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 815 ரூபாவாகவும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *