September 16, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குருவின் மறைவுக்கு இந்து குருமார் அமைப்பு அஞ்சலி

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குருவின் மறைவுக்கு இந்து குருமார் அமைப்பு அஞ்சலி

2.09.2026

ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்கிறோம்.

அன்பிற்கும் மதிப்பிற்குரிய ஆன்மீகப் பெருமகனார், கொக்கேட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயப் பிரதமகுரு அமரர் வைதிரமுத்து சோதிலிங்கம் குருக்கள் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு எமது மனம் ஈரம் கசிந்து, தாங்கா துயரில் ஆழ்ந்துள்ளது.
தன் வாழ்நாள் முழுவதையும் இறைப் பணிக்காகவும், ஆகம நெறி சார்ந்தும் ஆன்மீகச் சேவைக்காகவும் அர்ப்பணித்தவர். பாரம்பரியமிக்க குரு பரம்பரையில் தோன்றி இறையடி சேர்ந்த பெருமைக்குரியவர்.
கொக்கேட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுருவாக நின்று பல ஆன்மீகக் திருப்பணிகளைச் செய்ததோடு, பக்தர்களுக்கு அருளாசியும் நல் வழிகாட்டியும் வழங்கிய இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இவரின் மறைவு இவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், முழு ஆன்மீகச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
எச்சமூகமும் போற்றும் வகையில் வாழ்ந்து மறைந்த ஐயாவின் ஆத்ம சிவப்பிராப்திக்கு அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆன்மீகப் பெருமக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி.

“சிவாகமகலாநிதி “
சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

“பிரதிஷ்டா பூஷணம் “
சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *