துறைநீலாவணை நிருபர் பேரின்பராசா
அம்பாறை ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 04.09.2026 ஆந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இவ் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 09.09.2026 ஆந் திகதி பட்டிருப்புத் தொகுதிவாழ் மக்களை உபயகாரர்களாகக் கொண்டு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இவ் விழாவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் இவ் அலுவலகத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பூசை வழிபாடுகளை மேற்கொண்டதுடன் , அன்னதானம் வழங்கி இந்த மகோற்சவப் பெருவிழாவை சிறப்பித்திருந்தனர்.






