சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில், இம்முறை தரம் 5புலமைப் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை எடுத்த மூன்று மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் சமூக சேவையாளரும் ஆசிரியருமான கே. கண்ணதாசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களான சிவானந்தன் கோவர்ஷனன், பகவான் அகிர்த்தன், ரமணன் பிரணியா ஆகிய மூன்று மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.





