இம்முறை வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
அந்த வகையில், சிவகுமார் டக்ஷயன் என்ற மாணவன் 148 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன், பரீட்சைக்குத் தோற்றிய ஏனைய ஆறு மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இதன் மூலம், பாடசாலை வரலாற்றில் இம்முறை முதன்முறையாக 100 வீத சித்தி பெறப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் திரு. சி. புவனேஸ்வரன் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.




