செல்லையா பேரின்பராசா
அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் நான்கு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்று இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் தெரிவித்தார்.
இதற்கமைய ஜெயானந்தம் மகினேஷ் (158 புள்ளிகள்) , கமலகாசன் ராகவர்ஷா (146 புள்ளிகள்) , திவிராஜ் டர்ஸ்வனா (140 புள்ளிகள்) , பிரதீபன் அமிந்தனா (134 புள்ளிகள்) ஆகியோரே சித்தியடைந்த மாணவர்களாகும். இம் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியை திருமதி ஜீவா ரேகாசலனுக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.