September 16, 2026

Blog Post

Kalmunai Net > 2026

இயற்கை மருத்துவத்தின் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்கிறார் வைத்தியர் சுந்தரம் தில்லையம்பலம்

செல்லையா பேரின்பராசா  இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை எந்தவிதமான பக்க விளைவுகளும்  இன்றி இயற்கை வைத்தியத்தின் மூலமாக ஓரிரு நாட்களில் விரைவாக குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் உண்டு. இவ்வாறு அடித்துக் கூறுகின்றார் காரைதீவைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியரும்,  ஓய்வு பெற்ற பிரபல விஞ்ஞான பாட ஆசிரியருமான சுந்தரம் தில்லையம்பலம். அண்மைய நாட்களில் இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு காச்சலுக்கு இலக்காகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையிலும்,  பலர் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளதையும் அவதானித்த பாரம்பரிய […]

Read More

சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா குறைபாடுகளை நிவர்த்திக்க கல்முனை மாநகர ஆணையாளர் நௌபீஸ் நடவடிக்கை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று அங்கு கள விஜயம் மேற்கொண்டு, பூங்காவின் நிலைமைகளை ஆராய்ந்தபோது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான பணிப்புரைகளை அவர் விடுத்துள்ளார். இதன்போது பூங்காவை மேலும் ஒளியூட்டும் வகையில் தேவையானளவு பிரகாசமான மின் விளக்குகளை உடனடியாக பொருத்துமாறும் மலசல கூடங்கள் மற்றும் நீர் வசதிகளை ஒழுங்குபடுத்தி, செயற்படுத்துமாறும் மின்சாரக் கட்டமைப்புகளில் காணப்படும் குளறுபடிகளை […]

Read More

கல்முனை வலயத்திற்காக தங்கம் வென்று கார்மேல் பற்றிமா சாதனை!

கல்முனை வலயத்திற்குப் பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! ​கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டிகளில் (Provincial Level Major Games 2026), கல்முனை வலயத்தில் தங்கம் வென்ற ஒரே ஒரு பாடசாலையாக கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி பலத்த போட்டிகளுக்கு மத்தியில் மாபெரும் சாதனை படைத்துள்ளது தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளனர் ​வலயத்தின் பெருமையை மாகாண மட்டத்தில் நிலைநாட்டி, பெருமளவிலான பதக்கங்களைக் குவித்து அசத்திய எமது வீர, வீராங்கனைகளின் விபரம் இதோ: ​✨ தங்கப் பதக்கம் வென்றவர்கள் […]

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் செயலமர்வு

நூலக நிறுவனத்தின் கூட்டாண்மைகளை கட்டியெழுப்பும் நோக்கிலான செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த 2026 ஜூன் 30 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களின் ஆவணங்களை எண்ணிமப்படுத்துதல் தொடர்பான இக் கலந்துரையாடலானது, கௌரவ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஒத்துழைப்புடன், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் வழிகாட்டலில் புதிய மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூலக நிறுவனத்தின் […]

Read More

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக சிறிதரன் நியமனம்!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ள திரு. எஸ்.சிறிதரன் அவர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் முன்னிலையில்உத்தியோகபூர்வமாக தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிருவாக உத்தியோகத்தரை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவுத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வாழ்த்தி வரவேற்றனர். […]

Read More

நாவிதன்வெளி கற்பக விநாயகர் புகழ்பாடும் ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு நாளை 03.07.2026 வெளியீடு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பக்திப் பாடல்களின் தொகுப்பான ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு, நாளை (03.07.2026) வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு, நாவிதன்வெளி கற்பக விநாயகர் ஆலயத்தில் நண்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஆலய தர்மகர்த்தா சிவஸ்ரீ கண. மாதவராஜா, பாட்லாசிரியர் விவேகவெளி தமிழேந்திரன் எனும் புனைப்பெயரை உடைய ச. நவவேந்திரன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த இசைத்தட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து பக்திப் பாடல்களும் முழுமையாக செயற்கை நுண்ணறிவு […]

Read More

மண்முனை பாலத்தடியில்  வீதித்தடை அவசியமா? ஜனாதிபதிக்கு கமலநல குழுத் தலைவர் அகிலேஸ்வரன் தந்தி!

(வி.ரி. சகாதேவராஜா)  மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரிவில் உள்ள மண்முனை பாலத்தடியில் உள்ள போலீஸ் வீதித் தடை அவசியமா ? இதனை அகற்றித் தருமாறு  கொக்கொடிச்சோலை கிளாக்கொடிச்சேனை  கமநல அமைப்பின் தலைவரும் முன்னாள் தவிசாளரும் அதிபருமான  சிவ.அகிலேஸ்வரன் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு அவசர நந்தியை அனுப்பியுள்ளார் . அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது..  தங்களின் அரசாங்கம் பதவியேற்ற உடன் நாட்டில் உள்ள சில வீதித் தடைகள் முற்றாக நீக்கப்பட்டன.  ஆனால் மண்முனை  பாலத்தடியில் உள்ள வீதித்தடை […]

Read More

கல்முனை உவெஸ்லியில் மாபெரும் இரத்ததான முகாம்.

செல்லையா பேரின்பராசா கல்முனை மாநகரில் உள்ள புகழ்பூத்த கல்லூரியான கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 143 ஆவது ஸ்தாபகர் தினத்தின் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் இக் கல்லூரி அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் 02.07.2026 வியாழக் கிழமை காலை இடம்பெற்றது. ” ஒரு துளி இரத்தம் பல உயிர்களை வாழ வைக்கும் ” , ” வாருங்கள் இரத்தம் கொடுப்போம் உயிர் காப்போம் ” என்ற தொனிப்பொருள்களில் இடம்பெற்ற இந்த இரத்ததான […]

Read More

வடக்கு, கிழக்கில் அசாதாரண வெப்பநிலை உயர்வு ஏற்படும் அபாயம்!

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வழமையை விட அதிக வெப்பநிலை பதிவாகும் சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில், தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை தாக்கம் காரணமாக இலங்கையைச் சூழவுள்ள இந்து சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை ஜூலை மாத இறுதியில் சுமார் 1.6 பாகை செல்சியஸாகவும், ஓகஸ்ட் மாத […]

Read More

இன்று வேலோடுமலையிலிருந்து   அதிகாலையில் கதிர்காமம் ஆயிரம் வேல் பாதயாத்திரை ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா)  வரலாற்று பிரசித்திபெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிய ஆயிரம் வேல் பாதயாத்திரை இன்று(2) வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. வேலோடு மலை முருகன் ஆலய ஆதீனகர்த்தா முருக பக்தர் தியாகராஜா சுவாமிகள் தலைமையிலான 15 அடியார்கள்  வேல்சாமி மகேஸ்வரன் வழிகாட்டலில் மூன்றாவது வருட பாதயாத்திரையை விசேட  பூஜை சகிதம் ஆரம்பித்தனர். அவர்கள் நேராக சித்தாண்டி நாகதம்பிரான் ஆலயத்தையடைந்து  பின்னர் சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடைந்தனர்.  […]

Read More