September 15, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு – இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு – இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் விசாரணைகளும் அதனுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு மக்கள் மத்தியில் கடும் வரவேற்பு காணப்படுகிறது. குறித்த விசாரணைகளுக்கு சில எதிர்கட்சி அரசியல்வாதிகள் இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டக்ஙளை செய்து வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என நீர்கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.