இந்து சமுத்திரத்தில் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியத்தில் ஏற்பட்ட 6.5 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
இன்று (24.11.2026) பிற்பகல் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
புவி மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில், 17.78 தெற்கு அகலாங்கு மற்றும் 65.82 கிழக்கு நெட்டாங்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், பின்னர் வெளியிடப்பட்ட விசேட அறிவிப்பில் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலைமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
