September 24, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர கட்டமைப்பை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதையடுத்து, நாளை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை 8 மாகாணங்களில் இலத்திரனியல் வாகன அனுமதிப்பத்திர விநியோக சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கமைய மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இலத்திரனியல் கட்டமைப்பை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், எதிர்வரும் 29ஆம் திகதி முதல் குறித்த மாகாணங்களில் வாகன அனுமதிப்பத்திர விநியோகப் பணிகள் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவை இடைநிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு வருந்துவதாக சம்பந்தப்பட்ட மாகாண சபைகள் தெரிவித்துள்ளன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *