November 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பனங்காடு மகாசக்தி கிராமத்தில் அறநெறிப் பாடசாலை மீள ஆரம்பம்!

பனங்காடு மகாசக்தி கிராமத்தில் அறநெறிப் பாடசாலை மீள ஆரம்பம்!

(செல்வி வினாயகமூர்த்தி )

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனங்காடு மகாசக்தி கிராமத்தில், மீண்டும் அறநெறிப் பாடசாலையின் கற்றல் செயற்பாடுகள் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் முன்னெடுப்பில் இடம்பெற்ற இச்செயற்பாடு, கிராமப் புறங்களில் வாழும் சிறார்களிடையே ஆன்மீக விழுமியங்களையும், பண்பாட்டு மரபுகளையும் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் அறநெறிக் கல்வியைத் தமது கிராமத்திலேயே தொடர்ந்து கற்பதற்கான வாய்ப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் தலைவர் ஆர். ஜெகநாதன், அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாளர் எஸ். புண்ணியமூர்த்தி,அறநெறிபாட ஆசிரியர் உள்ளிட்ட மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலையில் இணைந்துகொண்ட மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *