September 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இலங்கை அரசு சவுதி அரசை நாடிய பின் இந்தியா தலையிட முடியும் மனோவிடம் இந்திய தூதுவர் தெரிவிப்பு!

இலங்கை அரசு சவுதி அரசை நாடிய பின் இந்தியா தலையிட முடியும் மனோவிடம் இந்திய தூதுவர் தெரிவிப்பு!

அனோஜன் சிவராசா விவகாரத்தில், இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சவுதி அரசை நாடி, கோரிக்கை விடுத்த பின், இது தொடர்பில் இந்திய அரசு தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என இந்திய தூதர் சந்தோஷ்-ஜா தம்மை இன்று நேரடியாக சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்தார்.

அனோஜன் சிவராஜா தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பங்களிப்பை கோரி இன்று மாலை இந்திய தூதரை தமுகூ தூதுக்குழு சந்தித்தது.

இதன் போது, மனோ எம்பி உடன், ஜமமு பொது செயலாளர் பரணீதரன் முருகேசு, உப தலைவர் பாரத் அருள்சாமி, மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் கோபி கணேசமூர்த்தி, ஆகியோரும் இடம் பெற்றனர்.

இலங்கை அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதே வேளை, அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு, அனோஜன் விவகாரத்துக்கு, ஒட்டு மொத்த இலங்கையர்கள் சார்பில் தீர்வு தேடவே தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என இதன் போது மனோ கணேசன் தெரிவித்தார். இந்திய பிரதமருக்கான எழுத்து மூலமான மனு ஒன்றும் கையளிக்க பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *