September 15, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பில் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பில் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்திற்குச் சென்று, கடந்த 31ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *