நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல் ராஜபக்சவிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.