September 15, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > சாய்ந்தமருது கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 93 மாணவர்கள் சித்தி

சாய்ந்தமருது கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 93 மாணவர்கள் சித்தி

சாய்ந்தமருது கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 93 மாணவர்கள் சித்தி : கடந்த ஆண்டை விட 10 மாணவர்கள் அதிகரிப்பு !

நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்டத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மொத்தம் 93 மாணவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்துள்ளனர்.

சாய்ந்தமருது கோட்டத்திலுள்ள பாடசாலைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில், அல் ஹிலால் வித்தியாலயத்தில் 46 மாணவர்களும், GMMS பாடசாலையில் 37 மாணவர்களும், லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் 4 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

அத்துடன், ரியாளுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், அல் ஜலால் வித்தியாலயம், அல் கமரூன் வித்தியாலயம் மற்றும் மல்ஹருஸ் ஸும்ஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு மாணவரும் சித்தியடைந்துள்ளனர்.

இதன்படி, சாய்ந்தமருது கோட்டத்தில் இம்முறை மொத்தம் 93 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு 83 மாணவர்கள் சித்தியடைந்திருந்த நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை 10 மாணவர்களால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க கல்வி முன்னேற்றமாகும்.

மாணவர்களின் இந்தச் சாதனைக்கு அவர்களின் கடின உழைப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிபர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டல் ஆகியவையே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் கல்விச் சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *