September 15, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகளின் வரவேற்பு

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகளின் வரவேற்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை தளர்த்தத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா – ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கட்டார் பிரதமர் வரவேற்றதுடன், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை உறுதியளித்துள்ளார்.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகளில் கட்டார் முக்கிய பங்காற்றியதோடு, சமரசத்தை ஏற்படுத்த முனைந்த நாடுகளில் ஒன்றாகவும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி ஒப்பந்தம் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்திற்கும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு உதவிய பாகிஸ்தான், கட்டார், எகிப்து, சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.