மட்டக்களப்பு சந்திவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது!
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25/11/2026) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
வருடாவருடம் மாவீர்ர் வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக, சந்திவெளி பிரதான வீதியில் மாவீரர்களின் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விழா மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோர்களின் பெருமைகள் குறித்து உரையாற்றினர்.
நிகழ்வின் இறுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு அன்பளிப்புப் பொதிகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், இ. சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா, முன்னாள் போரதீவு பற்று தவிசாளர் வி.ஆர். மகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





