November 25, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > நாவிதன்வெளியில் பாரதி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு!

நாவிதன்வெளியில் பாரதி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு!

நாவிதன்வெளி பாரதி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு கடந்த 24.11.2026 அன்று சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் வளவாளராக ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் திரு. குணரெட்ணம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல்களையும் பெறுமதியான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் பின்வரும் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

  1. சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம்
  2. சது/வேப்பையடி கலைமகள் வித்தியாலயம்
  3. சது/விவேகானந்தா மகா வித்தியாலயம்

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினருக்கும், பூரண அனுசரணை வழங்கிய பாரதி விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்களுக்கும் கழகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பங்குபற்றிய பாடசாலைகளுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் பரீட்சை அடைவுகளையும் மேம்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *