November 23, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒளி விழா!

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒளி விழா!

க.டினேஸ்

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்சி அவர்களின் தலைமையில், மாணவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வுகள் கடந்த 20.11.2026 வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அருட்தந்தை ஜே. லெபோர்ன் சுதன் OMI (அதிபர், கார்மேல் பாற்றிமா கல்லூரி தேசியப் பாடசாலை, கல்முனை), அருட்தந்தை ஜீனோ சுலக்சன் (பங்குத்தந்தை, திருச்சிலுவை திருத்தலம்), திருமதி ஏ.சி. நுஸ்ரத் நிலோபரா (பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வி நிர்வாகம் – சம்மாந்துறை), திருமதி எம்.எம். சித்தி பாத்திமா (பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வித் திட்டமிடல் – சம்மாந்துறை), அருட்சகோதரி ஜோதினி (மேலாளர், கார்மல் கன்னியர் மடம்), திரு. பி. குணசீலன் (EPSI ஒருங்கிணைப்பாளர், ISA, சம்மாந்துறை), ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திரு. எஸ். லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் ஆற்றல்களையும் கலைத்திறன்களையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும், நத்தார் தாத்தாவின் வருகை நிகழ்வும் விழாவுக்கு மேலும் சிறப்பூட்டியது. மாணவர்களின் பங்கேற்புடனும், விருந்தினர்களின் வாழ்த்துரைகளுடனும் ஒளி விழா நிகழ்வுகள் மகிழ்ச்சிகரமாக நிறைவடைந்தன.

https://www.facebook.com/share/p/1DaS2jMWLG இந்த இணைப்பில் புகைப்படங்களை பார்வையிடலாம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *