November 25, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை
கந்தஷஷ்டி சொற்பொழிவுக்காக சுவிஸ்நாட்டுக்கு மீண்டும் பயணமான இளம் சொற்பொழிவாளர் சனாதனன் (சனா)

கந்தஷஷ்டி சொற்பொழிவுக்காக சுவிஸ்நாட்டுக்கு மீண்டும் பயணமான இளம் சொற்பொழிவாளர் சனாதனன் (சனா)

கந்தஷஷ்டி விரதத்தை முன்னிட்டு சுவிஸ் சூரிச் ஶ்ரீவிஸ்ணுதுர்கை அம்மன் ஆலயத்தில் கந்தபுராண தொடர் சொற்பொழிவிற்காக மீண்டும் இந்த வருடம் இரண்டாவது தடவையாக சொற்பொழிவாளர் நாகராசா சனாதன் இன்று
எதிர்கட்சி தலைவர் மட்டக்களப்பு மேச்சல் தரை தொடர்பாக வாய் திறக்கவில்லை. மட்டக்களப்பில் இவருக்காக வாக்கு சேகரித்தோரின் பதில் என்ன? -பா.அரியநேத்திரன் மு.பா.உ

எதிர்கட்சி தலைவர் மட்டக்களப்பு மேச்சல் தரை தொடர்பாக வாய் திறக்கவில்லை. மட்டக்களப்பில் இவருக்காக வாக்கு சேகரித்தோரின் பதில் என்ன? -பா.அரியநேத்திரன் மு.பா.உ

மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு,மாதவனை அத்துமீறல் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சஜீத் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது அவருடைய உண்மை முகம் வெளிப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கூறுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய வாக்குகளை அவர் பெற்றவர் மட்டக்களப்பில் ஒரு அனியாயம் நடக்கும் போது பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக உள்ள சஜீத்பிரமதாச இதுவரை அதைப்பற்றி அலட்டாமல் இருப்பது அவருக்கு வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களை அவமதித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளில் அத்து மீறி பயிர்செய்கையில் ஈடுபடும் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை வெளியேற்று மாறு இதுவரை எதிர்கட்சி தலைவர் ஏன் கூறவில்லை இந்த விடயம் தொடர்பாக ஏன் வாய்திறக்கவில்லை.  கடந்த 2024 ,யூலை,24, ல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்து, மயிலத்தமடு மாதவனை பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதாக பகிரங்கமாக உறுதியளித்திருந்தார். தற்போது ஆட்சியில் இல்லை என்ராலும் எதிர்கட்சி தலைவர் என்ற சிறப்புரிமையை பாவித்து நாடாளுமன்றில் மேச்சல் தரை தொடர்பாக விவாதிக்முமுடியும் அதற்கு சிரமமாக இருந்தால் நாடாளுமன்றில் இது தொடர்பாக உரையாற்றி இருக்கலாம் இரண்டு வருடங்களாக எதிர்கட்சி தலைவராக இருந்து விகாரைகளையும்,புத்தர் சிலைகளையும் பற்றி உரையாற்றும் இவர் மேச்சல் தரை விடயத்தை கணக்கெடுக்காமல் இருப்பது அவருடைய இனவாதம் வெளிப்படுகிறது என்பதே உண்மை. கடந்த 2024, ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய 139110, வாக்குகளை பெற்றார் இரவு பகலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி ஒரு அணியினர் விசுவாசமாகவும். அற்பணிப்பாகவும் சுவரொட்டிகளை ஒட்டியும், துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தும் மேடை போட்டும் பிரசாரம் செய்தனர் அவர்கள் இதற்கு என்ன கூறுவார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 139110, மொத்த வாக்கு சஜீத் ஜனாதிபதி தேர்தலில் பெற்றார் அதில் மட்டக்களப்பு தொகுதியில் 64,068, வாக்குகளும்.கல்குடா தொகுதியில் 45,325,வாக்குகளும்,பட்டிருப்பு தொகுதியில் 26512, வாக்குகளும்,தபால் மூலமாக 3205,வாக்குகளும் அவருக்கு கிடைத்தன. தற்போது ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து சஜீத் எதிர்கட்சியாக தெரிவாகி இரண்டு வருடங்கள் கடக்கிறது ஆனால் இதுவரை மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பண்ணையாளர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் பண்ணையாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.  இரண்டு வருடங்களாக தொடர்போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், பசு மாடுகள் வெட்டி கொலை, பண்ணையாளர்கள் கடத்தல். என தினமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது.இது பற்றி அவரும் அவருடை கட்சி உறுப்பினர்களைம் மௌனம் காப்பது தென்னிலங்கை பிரதான அரசியல் தலைவர்கள் எவரும் கணக்கெடுக்காமல் இருப்பதும் அவர்களுடைய இனவாத முகங்கள் மீண்டும் நிருபணமாகியுள்ளது. பண்ணையாளர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்தும், மேச்சல் தரை தொடர்பாகவும் தேர்தல் காலத்தில் மட்டக்களப்புக்கு சென்று வாக்குறுதிகளை வழங்கும் இவர்கள் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்தால் மாற்றான்தாய் மனப்பாங்குடன் இருப்பது ஏன் என்பதை தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த  2026,நவம்பர்,02, அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒரு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.அதுதொடர்பாக நாடாளுமன்றில் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்,இஶ்ரீநாத் ஆகியோர் அங்கு நடக்கும் அத்து மீறல் தொடர்பாகவும், அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு தொடர்பாகவும். தற்போதைய அரசுதொடர்பாக விளக்கமாக உரையாற்றினர். உண்மையில் பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவர் இந்த விடயம் தொடர்பாக தமது கருத்தை கூறவில்லை அதனை விட்டு விலகி வேறு விடயங்களை மட்டுமே அவர் தொடர்ந்து பேசிவரிகிறார். ஆனால் ஒவ்வொரு மாதமும் தமிழ் பேசும் கட்சிகளை தமது அலுவலகத்தில் அழைத்து கூட்டம் நடத்துகிறார் மேச்சல் தரை தொடர்பாக அவர் அந்த கலந்துரையாடல்களில் பேசினாரா பேசவில்லையா என்பதை கூட அவருடைய ஊடக குழு வெளியிடவில்லை வடகிழக்கு மக்களால் தெரிவான தமிழ் தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒவ்வொரு மாதமும் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் அவருடன் உரையாடுகிறார்கள் படங்கள் காட்டப்படுகின்றன மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை தொடர்பாக இதுவரை ஒரு எதிர்கட்சி தலைவர் இதை பற்றி ஏன் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பேசவில்லை என கேட்காமல் தலையாட்டி வருகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது. மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரை தொடர்பாக எதிர்கட்சி தலைவர் அக்கறை காட்டவில்லை எனில் ஏன் ஒவ்வொரு பாராளுமன்ற அமர்விலும் எதுர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேரத்தை வீண்டிக்கவேண்டும் எனவும் மேலும் கூறினார்.
தீபாவளி – ஒளி ஏற்றும் திருநாள் மட்டுமா? இருளை அகற்றும் தீபம்… உள்ளங்களை மாற்றும் ஒளி! -சிறப்புக்கட்டுரை

தீபாவளி – ஒளி ஏற்றும் திருநாள் மட்டுமா? இருளை அகற்றும் தீபம்… உள்ளங்களை

தீபாவளி வந்துவிட்டது என்றாலே வீடுகள் தோறும் புத்தாடைகள், இனிப்புகள், விளக்குகள், பட்டாசுகள் எனக் கொண்டாட்டக் களைகட்டும். சிறுவர்களின் முகங்களில் மகிழ்ச்சி; பெரியவர்களின் உள்ளங்களில் உறவுகளைச் சந்திக்கும் எதிர்பார்ப்பு;
பனங்காட்டு பாலத்தின் கீழ் சல்வினியா தாவரங்கள் அகற்றும் பணி ஆரம்பம்: முகத்துவார நீர்மட்ட அதிகரிப்புக்கான காரணம் குறித்து நீர்ப்பாசனப் பொறியியலாளர் விளக்கம்.

பனங்காட்டு பாலத்தின் கீழ் சல்வினியா தாவரங்கள் அகற்றும் பணி ஆரம்பம்: முகத்துவார நீர்மட்ட

(செல்வி வினாயகமூர்த்தி.) அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழ் தேங்கியுள்ள சல்வினியா (Salvinia) மற்றும் ஆற்று வாழைத் தாவரங்களை அகற்றும் பணிகள்
இந்திய தூதரக அதிகாரியுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலை தொடர்பான கலந்துரையாடல்; மூன்று எம்பிக்கள் பங்கேற்பு!

இந்திய தூதரக அதிகாரியுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலை தொடர்பான கலந்துரையாடல்; மூன்று எம்பிக்கள் பங்கேற்பு!

( வி.ரி.சகாதேவராஜா) இந்திய தூதரக அரசியல் விவகார செயலாளர் ராம்பாபுவுடன், கல்முனை ஆதார வைத்தியசாலை தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. கொழும்பு கோல் பேஸ் கோட்டலில் இன்று (6)
விசேட தேவையுடைய மாணவர் விளையாட்டில் திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை!

விசேட தேவையுடைய மாணவர் விளையாட்டில் திருக்கோவில் கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை!

( வி.ரி.சகாதேவராஜா)  விசேட தேவையுடையோருக்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில், திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இப்
இந்துக் குருமார் அமைப்பின் -தீபாவளி நல்வாழ்த்துச் செய்தி

இந்துக் குருமார் அமைப்பின் -தீபாவளி நல்வாழ்த்துச் செய்தி

தீபாவளி நல்வாழ்த்துச் செய்தி. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய சமூகச் சிந்தனையும் நம்பிக்கையும்தீபாவளி என்பது இந்துக்களின் பாரம்பரியத்திலும் ஆன்மிக வாழ்வியலிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள மகத்துவம் மிக்க திருநாளாகும்.
சம்மாந்துறை அல்-அர்சத் அதிபர் எம். அப்துல் ரஹீமுக்கு கோலாகலமான பிரியாவிடை விழா!

சம்மாந்துறை அல்-அர்சத் அதிபர் எம். அப்துல் ரஹீமுக்கு கோலாகலமான பிரியாவிடை விழா!

(மின்மினி மின்ஹா) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/சது/அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம். அப்துல் ரஹீம் (SLPS-I) அவர்களின் அரச சேவை ஓய்வையொட்டி ஏற்பாடு
தீபாவளிக்கான சிறப்பு வில்லுப்பாட்டு  

தீபாவளிக்கான சிறப்பு வில்லுப்பாட்டு  

(  வி.ரி.சகாதேவராஜா) தீபாவளி சிறப்பை கொண்டாடுமுகமாக,  கல்முனை நெற் ஊடக வலையமைப்பு மற்றும் எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் இணைந்து வில்லுப்பாட்டு ஒன்றை வெளியிடவுள்ளது. “போதையால் வந்த வாதை
இன்று காரைதீவில் அதிகாலையில் பாரிய மின்னல் தாக்கம்-பாதுகாப்பு உத்தியோகத்தர் ராஜனின் வீடு சேதம் 

இன்று காரைதீவில் அதிகாலையில் பாரிய மின்னல் தாக்கம்-பாதுகாப்பு உத்தியோகத்தர் ராஜனின் வீடு சேதம் 

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில்  அதிகாலையில் ஏற்பட்ட பாரிய மின்னல் தாக்கத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் வீடு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் இன்று (6) வெள்ளிக்கிழமை அதிகாலை