November 26, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம் 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகம் 

(  வி.ரி.சகாதேவராஜா)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மகா சங்காபிஷேகம் இன்று  (25)  புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சிவ ஸ்ரீ அடியவன் க. வி. பிரமீன் சிவம் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம் பெற்றது

தென்கிழக்கு பல்கலைக்கழக இந்துமாமன்றத்  தலைவர் கோ.பிரகீத் தலைமையிலான இந்துமா மன்றத்தினர் சிறப்பாக மேற்கொண்டனர்.

முன்னதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் கடந்த (13) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்து மாமன்றத்தின் தலைவர் – கோ. பிரகீத் செயலாளர் – சு. நிலோக்சன் 

பொருளாளர் – மு. சுதர்சன்,

இந்து மாமன்ற பெரும் பொருளாளர் – சிரேஷ்ட விரிவுரையாளர் – ந.  சுபராஜ் 

இந்து மாமன்ற பெரும் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் – செல்வக்குமாரி உள்ளிட்ட குழுவினர் கடந்த 12 வருடங்களுக்கு பிறகு இப் புனராவர்த்தன கும்பாபிஷேகத்தை நிறைவேற்றியிருந்தார்கள்.

அதேவேளை சங்காபிஷேகத்திற்கான மகேஸ்வரபூஜைக்கு(அன்னதானம்),

வசீகரன் அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகர் மகான் கோடீஸ்வரன் அவர்களின் செல்வப்புதல்வன் தில்க்ஷன் – றுசாறா புதுமணத் தம்பதியரின் திருமணத்தையொட்டி அனுசரணை வழங்கப்பட்டது.

காரைதீவு ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சிறப்புரை ஆற்றினார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற இந்த மகா சங்காபிஷேகத்தில்,  நீண்ட ஆயுள், நிறைந்த கல்வி, நிறைந்த செல்வம், குறைவிலா மகிழ்ச்சி, ஒற்றுமையான வாழ்க்கை பெற்று சிறப்புடன் வாழ வேண்டி விசேட பூஜைகள், அபிஷேகங்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மகேஸ்வர பூஜை செய்த புதுமணத் தம்பதியரை மனதார வாழ்த்தினர்.

தில்க்ஷன் – றுசாறா தம்பதியர் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று பதினாறு பேறுகளும் பெற்று வாழ இறைவனை வேண்டுவதாக குடும்பத்தின் சார்பில், காரைதீவு முன்னாள் தவிசாளரும் குடும்ப நண்பருமான கி.ஜெயசிறில் வாழ்த்தினார் .

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *