November 26, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவை கண்டித்தும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞனுக்கு நீதி கோரி பொலிஸ் நிலையம்;;;; முன் ஆர்ப்பாட்டம்

வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவை கண்டித்தும் தாக்குதலுக்கு உள்ளான இளைஞனுக்கு நீதி கோரி பொலிஸ் நிலையம்;;;; முன் ஆர்ப்பாட்டம்

(கனகராஜா சரவணன்)

வவுணதீவு வாழைக்காலை பிரதேசத்தில் கோபு வாள்வெட்டு குழுவின் தாக்குதலை கண்டித்தும் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்  இளைஞனுக்கு நீதி கோரியும் இந்த காடையர் குழுவிற்கு எதிராக இன்று புதன்கிழமை (25) பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கோபு வாள்வெட்டு குழுவினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று புதன்கிழமை (25) வவுணதீவு வீதி சுற்றுவட்டத்தில் காலை 10.00 மணிக்கு ஒன்றிணைந்து கொண்டனர் இதில் கோபுவின் இந்த இரத்த வேட்டைக்கு முடிவில்லையா, கோபு வாள் வெட்டுக்குழு ஒழிக, கோபுவின் பயங்கரவாதம் ஒழிக, கோபுவின் கசிப்பு , கள்ள மண்  கொள்ளையை தடுத்து நிறுத்து என சுலோகங்கள் ஏந்தியவாறு பொலிசாரே நீதி வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் பொலிஸ் நிலையம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வரவழைத்து ஆர்ப்பாட்டகாரர்களிடம் கேட்டறிந்து கொண்டு இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோபு வாள் வெட்டுக் குழுவினரைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளதாகவும் கோபு தலைமறைவாகி உள்ளதாகவும் இந்த சம்பவத்தில்; அவர்கள் மீது தாக்குதல் நடத்திய தலைமறைவாகியுள்ள உங்கள் பக்கத்தை சேர்ந்த 3 பேரையும் கொண்டு வந்து தருமாறு நாங்கள் நீதியை சரியாக செயல்படுத்துவோம் எனவும்

அந்த குழு தொடர்பாக நீங்கள் பயப்பட வேண்டாம் ஏதாவது அந்த குழுவினால் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக எனது கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவரது இலக்கத்தை வழங்கியதுடன் யாராக இருந்தாலும் நாங்கள் சட்டத்தை கடைபிடிப்போம் என தெரிவித்ததையடுத்து அவரிடம் கோபு வாள் வெட்டுக்குழுவை இல்லாமல் செய்யுமாறு கோரிய மகஜர் ஒன்றை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *