November 28, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > இன்று மட்டக்களப்பில் சர்வதேச ஆண்கள் தின நிகழ்வு

இன்று மட்டக்களப்பில் சர்வதேச ஆண்கள் தின நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா)

உலக நண்பர்கள் அமைப்பு (WFN) ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்யும் “சர்வதேச ஆண்கள் தினம் – 2026” நிகழ்வு  மட்டக்களப்பில் சர்வதேச ஆண்கள் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் சர்வதேச ஆண்கள் தின நிகழ்வு (28) சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

“வேலைத்தளத்தில் ஆண்களின் மனநல நல்வாழ்வு” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நிகழ்வுக்கு உலக நண்பர்கள் அமைப்பின் உயர்ஆணையர்  ஏ. கங்காதரன் தலைமை தாங்கவுள்ளார்.

ஆன்மீக விருந்தினராக சிவஸ்ரீ சி. குகநாத ஐயர் கலந்துகொள்ளவுள்ளதுடன், முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மாநகர முதல்வர்  சிவம் பாக்கியநாதன் பங்கேற்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினராக  பிரதேச செயலாளர் உ. உதயசிறிதர் மற்றும் கௌரவ விருந்தினர்களாக தேசபந்து மு. செல்வராசா, திருமதி திலகவதி கரிதாஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

“ஆண்களின் மனநல ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுவது வீட்டினாலா…? பணியிடத்தினாலா…?” என்ற சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெறவுள்ள இப்பட்டிமன்றத்தை கதிரவன் பட்டிமன்றப் பேரவை வழங்குகின்றது.

இன்றைய சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் குடும்ப அழுத்தங்கள், பணியிடச் சுமைகள், பொறுப்புகள் மற்றும் அவற்றினால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள் தொடர்பில் இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்படவுள்ளன.

ஆண்களின் மனநல ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குடும்பம் மற்றும் பணியிடச் சூழல் எவ்வாறு அவர்களின் உளவியல் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது தொடர்பில் சிந்திக்க வைக்கும் வகையிலும் இப்பட்டிமன்றம் அமையவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *