November 27, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சம்மாந்துறை பாதுகாப்பு மற்றும் மக்கள் குறைகள் தொடர்பான விசேட கூட்டம்: பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் அதிரடித் தீர்மானங்கள்!

சம்மாந்துறை பாதுகாப்பு மற்றும் மக்கள் குறைகள் தொடர்பான விசேட கூட்டம்: பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் அதிரடித் தீர்மானங்கள்!



(ஜலீல் ஜீ + தில்ஷாத் பர்வீஸ் |)

சம்மாந்துறை பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் குறைகளைக் கேட்டறிந்து உடனடித் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல் இன்று (27) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

அம்பாறை – மட்டக்களப்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.எஸ். பீ.சுஜீத் வெதமுல்ல அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதேச பாதுகாப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுப் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன:
📌 எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
✅ கைவிடப்பட்ட வீடுகள் பராமரிப்பு: வெளிநாடுகள் அல்லது வெளியூர்களில் வசிப்பவர்களின் பராமரிக்கப்படாத வீடுகள் மற்றும் வளவுகளைப் பராமரிக்க, உறவினர் அல்லது குடும்பப் பிரதிநிதி ஒருவரை கட்டாயம் நியமிக்க வேண்டும்.
✅ வாடகை வீடுகள் கண்காணிப்பு: இப்பகுதிகளில் வாடகைக்குத் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வெளியூர் நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அவர்கள் தங்கியுள்ள இடங்கள் குறித்த சரியான தரவுகளைப் பட்டியலிட்டுப் பராமரிக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
✅ பொலிஸ் – சிவில் பாதுகாப்பு கூட்டு ரோந்து: வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இரவு மற்றும் பகல் வேளைகளில் பொலிஸாரும் பொதுமக்கள் அடங்கிய சிவில் பாதுகாப்புக் குழுவினரும் இணைந்து ரோந்துப் பணிகளில் ஈடுபடுவர்.
✅ காடுகள் மற்றும் பற்றைகள் துப்பரவு: போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த, காடுகள் மற்றும் பராமரிக்கப்படாத வளவுகளைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
✅ கட்டாக்காலி மாடுகள் கட்டுப்பாடு: விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சேதம் விளைவிக்கும் கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்தத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
✅ வீதிப் புனரமைப்பு: போக்குவரத்து மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு ஏதுவாகச் சேதமடைந்துள்ள வீதிகள் புனரமைக்கப்படும்.
🤝 கலந்து கொண்டோர்:
இக்கூட்டத்தில் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பிராந்திய மற்றும் மாவட்டப் பொலிஸ் அத்தியட்சகர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மஜ்லிஸ் அஷ்ஷூரா சபை, நம்பிக்கையாளர்கள் சபை, விழிப்புக் குழு, ஹிலால் பள்ளிவாசல் நிர்வாகிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வீரமுனை-04 , உடங்கா-02 கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *