November 27, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > மட்டக்களப்பில் நோயாளி பெண் ஒருவரை நடு வீதியில் அநாதரவாக விட்டு சென்றவரை மீட்டு வைத்தியசாலையில் பொலிசார் அனுமதித்தனர்!

மட்டக்களப்பில் நோயாளி பெண் ஒருவரை நடு வீதியில் அநாதரவாக விட்டு சென்றவரை மீட்டு வைத்தியசாலையில் பொலிசார் அனுமதித்தனர்!

–

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு திருப்பெருந்துறை  வீதியில் நோயாளியான பெண் ஒருவர் அநாதரவாக பரிதவிக்க விட்டு சென்ற நிலையில்  அவரை பொலிசார் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

பொலிசாருக்கு கிடைத்த 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த  தகவலையடுத்து வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார்  மனித நடமாட்டம் இல்லாத வீதியில் குறித்த பெண்ணை இனம் தெரியாதோர் விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்

இதன் போது கடும் நோயால் அவதிப்பட்டு அநாதரவாக பரிதவித்துக் கொண்டிருந்த பெண்ணை பிற்பகல் 1.00 மணியளவில் மீட்டு 1990 அம்புலன்ஸ் வரவழைத்து அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *