அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC!

அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC! நேற்று முன்தினம் தினம் (27.07.2022) எமது இணையதளத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை ஜெனறேற்றர் இயந்திரத்திற்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதனால் மின்வெட்டு நேரங்களில் நோயாளர்கள்…

கடலலையில் இழுத்து செல்லபட்டு காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

இச்சம்பவம் கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் 3 மாணவர்கள் பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான அன்று தீர்த்தம் உற்சவத்தில் நீராடச் சென்ற போது…

இந்த மாதம் 27 கோவிட் மரணங்கள் பதிவு

இந்த மாதம் இதுவரையில் 27 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையிலான காலப் பகுதியில் 1135 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். சமூகத்தில் நோய்த் தொற்றாளர்கள் அதிகமாக இருக்கக்கூடும்

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்திருந்தது. இதன்படி, சுமார் 50 பொதுமக்கள்…

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் வெளிப்படையாக பேச தயார் – நீதி அமைச்சர் விஜயதாஸ இலங்கையில் தமிழ் மக்களுக்கு இதுவரை தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கும் நாம் மீதம் வைக்க கூடாது.…

அம்பாறை மாவட்டத்தில் 1100 குடும்பங்களுக்கு நிவாரண
பொருட்கள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் 1100 குடும்பங்களுக்கு நிவாரணபொருட்கள் வழங்கி வைப்பு பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட உள்ள 1100 குடும்பங்களுக்கு,அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால், நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இது தொடர்பான நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றன.ரூ.2500 பெறுமதியான (10kg அரிசி,…

பொதுநலவாய போட்டிகளுக்கு சென்ற 5 இலங்கை வீரர்களுக்கு கோவிட் தொற்று

22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகருக்குச் சென்ற இலங்கையை சேர்ந்த 5 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, நான்கு விளையாட்டு வீரர்களும் பயிற்றுவிப்பாளர் ஒருவருமே இவ்வாறு கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஒலிம்பிக் குழு…

இலங்கையை நோக்கி பயணிக்கும் சீனாவின் ஆய்வு கப்பல்! தீவிர கண்காணிப்பில் இந்தியா

சீனாவின் அறிவியல் ஆய்வு கப்பல் யுவான் வாங்-5 ஆகஸ்ட் 11 ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழையும் என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா தனது தெற்கு பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

140,000 LP எரிவாயு சிலிண்டர்கள் இன்று (28) வினியோகம்!

140,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (28) சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ காஸ் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தில் மேலும் பல எரிவாயு ஏற்றுமதிகள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக LP…

இலங்கையின் நிலை கருதி ‘ஆசிய கிண்ணத்தொடர்’ ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றம்!

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்துவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதில், பல கட்ட பேச்சுவார்த்தைகளின்…