ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் குறித்து கலந்துரையாடல் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து இன்றைய தினம் சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து…

பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகம்

பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பேருந்துகளுக்காக கொட்டாவ-மகும்புர மல்டிமோடல் பகுதியில் முன்பணம் செலுத்தப்பட்ட பேருந்து அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.…

கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணி சாம்பினானது!

இவ்வாண்டிற்கான கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட ஆண்கள் அணியினர் சாம்பியனாக தெரிவாகியுள்ளனர். கிழக்கு மாகாண மல்யுத்தப் போட்டிகள் திருகோணமலை மக்கேசர் உள்ளக அரங்கில் இடம்பெற்றுள்ளது. இதில் ஆண்களுக்கான 10 வகையான எடைப்பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் திருகோணமலை,…

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கல்முனையில் இடம் பெற்ற பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கல்முனையில் இடம் பெற்ற பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கு…

கோட்டாவின் வருகையை வைத்து மொட்டு போடும் திட்டம்?

கோட்டாவின் வருகையை வைத்து மொட்டு போடும் திட்டம்? தாமதப்படுத்தும் காரணம் இதுதான்முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதனை தாமதப்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெறும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச செயற்பட்டு…

CCTVயில் பதிவான கோர விபத்து

கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று காரை முந்திச் செல்ல முற்பட்டு லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. எதிரே வந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி பின்னர்…

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு

தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுல்சீம தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 110 விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் பிரித்தானியா சைவ…

இலங்கைக்கு மற்றுமொரு நிபந்தனை விதித்த சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை வழங்குவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் தேவை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கையின் கடன் நிலையற்றதென மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நீண்ட கால நிதி வசதிகளுக்கான சர்வதேச நாணய…

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் : அதிவிசேட வர்தமானி வெளியீடு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி: வெள்ளை முட்டை ரூ 43 பழுப்பு முட்டை ரூ 45

12 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகத்தை இடை நிறுத்த தீர்மானம்!

இலங்கையில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தேசிய எரிபொருள் அனுமதி (QR) வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிபொருள் நிலையங்கள் இணங்கத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கமைய…