Month: February 2023

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஜனாஸா வாகனம் அறிமுகம்!

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் முயற்சியின் பயனாக பிரதேச வர்த்தகர்கள், பொதுமக்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா வாகன அறிமுக நிகழ்வு மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எல். இந்தியாஸ் தலைமையில்…

விரைவில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு – உச்ச நீதிமன்றம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தின் போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் கடந்த 2015…

கல்முனை பொது நூலகத்திற்கு தனி நபரின் பெயரைச் சூட்ட அனுமதியோம்

பாறுக் ஷிஹான் கல்முனை பொது நூலகத்திற்கு தனி நபரின் பெயரைச் சூட்ட முனைவதை வன்மையாக கண்டிக்கிறோம். பெயரை மாற்றினால் இன முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம், ராஜன், வடிவுக்கரசு சந்திரன், கதிரமலை செல்வராஜா ஆகியோர்…

பிரித்தானியர்களுக்கு உயிராபத்து – ஆட்டோ புயல் தொடர்பில் வானிலை மையம் எச்சரிக்கை

பிரித்தானியாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஓட்டோ புயல் தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. பலத்த காற்று காரணமாக பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஓட்டோ…

QR இல்லாமல் பெற்றோல் அடிக்க கோரி நாவற்குழி எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள் வெட்டு!

QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த…

2022 A/L பரீட்சை இன்றுடன் நிறைவு

2022 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகின்றது. ஒத்திவைக்கப்பட்ட 2022 A/L பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2 ஆயிரத்து 200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது. 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தமாக 331,709…

விசேட தேவை உடைய குழந்தைகளுக்கு சிறப்பாக வைத்திய சேவை வழங்கிய உத்தியோகத்தர்களுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையால் கௌரவிப்பு!

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கி அவர்களது செயற்பாடுகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்திய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. கனடாவில் இருந்து இயங்கும் சர்வம் அறக்கட்டளை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது வைத்தியசாலை…

அரசாங்கம் நிதியமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கை

பொது மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு எவ்வாறு நிதியளிப்பது என்பது தொடர்பில் ஆராயுமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலின் போதும் எதிர்கொள்ளாத பொருளாதார…

பிரதமர் செயலகத்தில் அதிரடியாக துண்டிக்கப்பட்ட மின்சாரம்

பிரதமர் செயலகத்தில் மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 07 மல் வீதியில் அமைந்துள்ள பிரதமர் செயலகத்திலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 6 லட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் மின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர்…

3 பில்லியனை வழங்கினால் தேர்தலை நடத்தலாம்; இல்லையெனில் காலம் தாழ்த்தப்படலாம் – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு மதிப்பிடப்பட்டுள்ள செலவில் தேர்தலுக்கு முன்னர் 3 பில்லியன் வழங்கப்பட்டால் ஆணைக்குழுவினால் தேர்தலை நடத்த முடியும். அவ்வாறில்லை என்றால் மாத்திரமே சட்டத்திட்டங்களுக்கமைய குறுகிய காலத்திற்கு தேர்தலைக் ஒத்திவைக்க வேண்டிய நிலைமை ஆணைக்குழுவிற்கு ஏற்படும் என்று முன்னாள் தேர்தல்…