Month: February 2023

13 ஐ எதிர்ப்பவர் மாகாண சபையின் ஆளுநர்- அனுராதா யஹம்பத்திற்கு சாட்டையடி கொடுத்த சித்தார்த்தன்

13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் ஆளுநராக பதவி வகித்துக்கொண்டு 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தக்கூடாதென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவிப்பது வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார். 9வது…

தேர்தலுக்கு எதிரான மனுவின் விசாரணை திகதி ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கையிலும் சில இடங்களில் நில நடுக்கம்!

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குகள் எரித்தது 13ஐ அல்ல, ஒட்டுமொத்த நாட்டை

பௌத்த பிக்குகள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையே எரிக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். பாராளுமன்ற…

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இந்த விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாடுகள்…

வாக்குச்சீட்டு அச்சிடல் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு…

ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது இன்றும், நாளையும் விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. விவாதம் அதற்கமைய இன்றும், நாளையும் விவாதம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கைத்…

மாமனிதர் சந்திரநேருவுக்கு பாண்டிருப்பில் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் 18வது ஆண்டு நினைவேந்தல் பாண்டிருப்பில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரின் ஏற்பாட்டில் நேற்று நினைவு கூறப்பட்டது.

துருக்கி, சிரியாவிற்கு உதவும் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிட்சர்லாந்தை மையமாக கொண்டு இயங்கி வரும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் சர்வதேச செம்பிறை சங்கங்கள் உதவி செய்வதற்கு தீர்மானித்துள்ளது. சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு…

ஜனாதிபதி ரணில் திறைசேரிக்கு விடுத்துள்ள அதிரடி உத்தரவு

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , திறைசேரி செயலாளருக்குப்…