Month: August 2022

சீமெந்து ஏற்றுவதற்கான கட்டணத்தை வரையறுக்கிறது
கல்முனை மாநகர சபை

சீமெந்து ஏற்றுவதற்கான கட்டணத்தை வரையறுக்கிறதுகல்முனை மாநகர சபை (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து பொதிகளை ஏற்றுவதற்கான அதிகூடிய வாகன வாடகைக் கட்டணமாக பொதியொன்றுக்கு 60 ரூபாவே அறவிடப்பட வேண்டும் என மாநகர…

சரவணாஸ் க. பிரகலதன் நிதிப்பங்களிப்பில் பழச்சாறு தயாரிக்கும் உபகரணம் வழங்கி வைப்பு!

காரதிவு பிரதேச செயலத்திற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு பழச்சாறு தயாரிக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி பங்களிப்பை கல்முனை சரவணாஸ் நகைமாளிகை உரிமையாளர் க. பிரகலதன் வழங்கியிருந்தார். பிரதேச செயலாளர் . எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் குறித்த பயனாளிக்கு…

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார்.

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார். தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான தமிழ் கடல் நெல்லை கண்ணன் இன்று உடல் நல குறைவால் காலமானார் . காந்தி , காமராஜர் உள்ளிட்டோரின் கருத்தியல்களை தாங்கி அரசியலில் களமாடிய…

IMF குழு அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வருகை தரும்

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு ஒகஸ்ட் மாத இறுதிக்குள் இலங்கைக்கு வந்து பணியாளர் மட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்யும் என்று தெரிவித்தார். CBSL இன் சமீபத்திய…

ஜனாதிபதி ரணிலை மொட்டு பஷில் சந்திக்கவாம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளர். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதிக்கும், பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெறும் முதலாவது…

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

மக்கள் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவில் வசிப்பதற்கு முயற்சித்து வருகின்றார். அதற்கமைய, அவர் அமெரிக்க கிரீன் கார்ட் லொத்தர் மூலம் வாய்ப்பு பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க…

கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது! பாறுக் ஷிஹான் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்தவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை…

தாய்லாந்தில் 17 இடங்களில் தாக்குதல்!

தெற்கு தாய்லாந்தில் இன்று 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பல்பொருள் அங்காடிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு…

போனவர் 24 இல் வருகிறாராம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷஎதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியிருந்தார். வாக்குமூலம் வழங்கிய பின்…

ஞானசார தேரரின் ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவின் அறிக்கையை கைவிடுகின்றது அரசாங்கம்!

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் உடனடியாக தீர்வுகாணப்படவேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுவதாலும், பல தரப்பினரின் எதிர்ப்பு காரணமாகவும் அரசாங்கம்…