Category: பிரதான செய்தி

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 325 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு பணம் அனுப்பும் வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) தெரிவித்துள்ளது. இதன்படி, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் கடந்த மாதம் 16.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில் வாய்ப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதல் மின்சார வாகன இறக்குமதிக்கான உரிமம் வழங்கிவைப்பு..!

வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் விசேட வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தின் முதலாவது உரிமம் இன்று வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கையிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளருக்கு குறித்த…

டயஸ்போராவுடன் ஜனாதிபதி ரணில் லண்டனில் சந்திப்பு

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரிட்டானியாவில் வசிக்கும் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். இதன் போது இலங்கையின் எதிர்கால பொருளாதார செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்ததுடன்…

ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவில் போராட்டம்

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகளுக்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் இதன்போது யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் குறித்த போராட்டம்…

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தில்…!

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கையில் உணவுப்…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் விஷேட அறிவிப்பு

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களின் சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினிக்…

பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று

பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று (19) இடம்பெறவுள்ளது. இறுதி சடங்கில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், மகாராணியின் இன்றைய இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

தாமரை கோபுரம் திறக்கப்பட்டதால் மூன்று நாட்களில் 7.5 மில்லியன் வருவாய் !

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த மூன்று நாட்களில் சுமார் 14,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற…

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசம்!

எதிர்வரும் அறுவடை காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.…