Category: இலங்கை

O/L பரீட்சை ஒத்திவைப்பு: பாடசாலை விடுமுறையிலும் மாற்றம்

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருகின்றனர். எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை…

இலங்கையில் இனி வீதிகளில் செல்ல கட்டணம்!

நாட்டிலுள்ள அனைத்து பிரதான மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளையும் கட்டணச்சாலைகளாக மாற்றுவதற்காக, வீதிப் பராமரிப்பு நிதியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன் ஆரம்ப நிதியாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன…

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர்

பஹாமாஸ் நாட்டுக்கு சொந்தமான போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும், பின்னர் மொராக்கோவுக்கும் அவர் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு…

இலங்கையின் தங்க கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அன்னிய…

ஈஸ்டர் தாக்குதல்! சஹ்ரானின் மைத்துனர் மீண்டும் கைது

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வைத்து சஹாரான் ஹாசிமின் மனைவியின் சகோதரனை கைது செய்ததாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2019 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 2022 செப்டெம்பர் 23 ஆம்…

வெடுக்குநாறி விவகாரத்தை கையில் எடுத்த இந்தியா; இன்று ஆலய நிர்வாகத்தை சந்திக்கும் இந்திய தூதுவர்!

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இன்று சந்திக்கின்றார். வெடுக்குதாறி ஆலய நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையின் பெயரில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெறுகின்றது. கொழும்பில் இடம்பெறும் இச் சந்திப்பிற்கான ஏற்பாட்டை ஓர் ஆலய நிர்வாகத்தினர் ஊடாக…

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால் அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தின் நிதியனுசரனையில் ப்ரண்லி சிப் பௌன்டேசன் மற்றும் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம் இணைந்து 100 வறிய மாணவர்களுக்கு அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு உடபுஸல்லாவ முத்து கலாச்சார மண்டபத்தில்…

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரையும் இணைத்துக்கொண்டு புதிய அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது. ராஜாங்க அமைச்சர்கள் மட்டத்திலும் மாற்றம் மேற்கொள்ளவுள்ளாதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பலம் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்…

தொடருந்து தடம் புரண்டதில் 17 பேர் படுகாயம்

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் – அக்போபுர பகுதியில் தொடருந்து தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (07.04.2023) பதிவாகியுள்ளது. கல் ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்து கித்துல்உதுவ பகுதியில் தடம் புரண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலையில்…

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது!

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (06) வெளியிடப்பட்டுள்ளது.