கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நியமனம்
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.