Category: பிரதான செய்தி

இலங்கை வரும் கோட்டாபய! வெளியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்குள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி…

இலங்கையை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாக்கவா சீனக் கப்பல் வருகிறது? அரசு இதனை எவ்வாறு அணுகும்?

இலங்கையை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாக்கவா சீனக் கப்பல் வருகிறது? அரசு இதனை எவ்வாறு அணுகும்? -கேதீஸ்- இன்று இலங்கை பாரிய பொருளாதர நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமைக்கு கடந்த அரசாங்கத்தின் போக்குகள், சீனா இலங்கைக்கு கடந்த காலங்களில் கடன்களை வாரி வழங்கியமை, வருமானம் இல்லாத…

டீசலின் விலை 10 ரூபாவினால் குறைப்பு​

டீசலின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையின் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு 10 மணிமுதல் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என…

லிட்ரோ எரிவாயு விலையும் குறைகிறது?

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 5ம் திகதி முதல் விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 300,000 யூரோக்கள் பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானம்

உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்கள் பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. “உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் பங்களிப்பு வழங்கப்படும், மேலும் இது உணவு உதவி, இலக்கு…

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்வதற்கு முற்பட்ட 50 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முற்பட்ட 50 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வென்னபுவ கடற்பரப்பில் வைத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு இது சரியான தருணமல்ல – ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாடுதிரும்புவதற்கு இது சரியான தருணமல்ல என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் தற்போது நாடு திரும்பினால் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடையலாம் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது அவர் நாடு திரும்புவதற்கான தருணம் என நான்…

காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் இருந்து முழுமையாக வெளியேறும் குழுக்கள்

காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் செயற்பட்டு வந்த சில அமைப்புகளும் சுயேச்சைக் குழுக்களும் அதிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, கடந்த சில நாட்களாக போராட்ட களத்தில் இருந்து பல அமைப்புக்கள் மற்றும் குழுக்கள் வெளியேறியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட…

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – இரா.சம்பந்தன்

சர்வ கட்சி அரசுக்கு த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – சம்மந்தன் நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதற்கு சர்வ கட்சி அரசு அமைவது அவசியமாக உள்ளது. ஆகவே அமைய உள்ள சர்வ கட்சி அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! நாளை முதல் நடைமுறை

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறும்…