Category: பிரதான செய்தி

இலங்கை இந்தோனேசியா 70 வது ஆண்டு நட்புறவு பூர்த்தி விழா

இலங்கை – இந்தோனேசியா நாடுகளுக்கிடையே இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தி 70வது ஆண்டு நிறைவு விழா இந்தோனேஷியா உயர்ஸ்தானிகர் டேவி கஸ்டினா டொபிங் ( Dewi custina Tobing) தலைமையில் கொழும்பு இந்தோனேசியா உயர்ஸ்தானிக காரியாலயத்தில் அமைந்துள்ள ரிப்டாலொகா (Riptaloka) மண்டபத்தில் இடம்பெற்றது.…

அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிபந்தனை! நிதியமைச்சின் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு நிதியமைச்சினால் கடும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…

கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 ஓகஸ்ட் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:…

மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி – விசேட வர்த்தமானி வெளியீடு

மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.…

தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் விரைவில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விசேட கருமபீடம்

தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட…

300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி களுக்கு தற்காலிக தடை விதித்த ஜனாதிபதி ரணில் – பட்டியல் இணைப்பு

பல்வேறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு…

கல்முனை வடக்கு பிரதேச செயலக 29 கிராம சேவகர் பிரிவுகளும் கல்முனை தெற்குடன் இணையத்தில் இணைப்பு – கல்முனை தமிழரின் கோவணத்தையும் பறித்த பின்பா அனைத்து கட்சி தமிழ் தலைமைகள் விழிக்கும்?

கல்முனை வடக்கு பிரதேச செயலக 29 கிராம சேவகர் பிரிவுகளும் கல்முனை தெற்குடன் இணையத்தில் இணைப்பு – கல்முனை தமிழரின் கோவணத்தையும் பறித்த பின்பா தமிழ் தலைமைகள் விழிக்கும்? கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அரச இணையத்தளத்தில் இருந்து நீக்கம்…. தமிழ்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அரச இணையத்தளத்தில் இருந்து நீக்கம்…. தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் மௌனமாக இருக்கப் போகின்றார்களா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அரச இணையத்தளத்தில் இருந்து நீக்கம்…. தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் மௌனமாக இருக்கப் போகின்றார்களா? பௌதிக ஆளணி வளங்களுடன் 29 கிராம சேவகர் பிரிவுகளுடன் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் கல்முனை வடக்கு…

துருக்கியிடம் இருந்து இலங்கைக்கு அவசரகால மருந்துப் பொருட்கள்

துருக்கிய அரசாங்கம் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. Filgasstrin ஊசிகளை உள்ளடக்கிய முதலாவது சரக்கு விமானம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, 14 ஒகஸ்ட்…

IMF உதவி தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரின் பதில்!

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கை பெற எதிர்பார்க்கப்படும் கடன் வசதி இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். Bloomberg அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணலில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத்…