Category: பிரதான செய்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவதில்லை; உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு தனியாக வேட்புமனு: ரெலோ, புளொட்டுடன் பேசவும் முடிவு

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதில்லை என்ற அதன் தலைவர் சம்பந்தனின் அறிவிப்பை உள்வாங்கி அச்செயற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கில்…

இலங்கையில் மீண்டும் கோவிட்

இலங்கையில் மீண்டும் கோவிட் தொற்றுக்குள்ளாவோர் இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி நேற்று (07.01.2023) புதிதாக நால்வர் கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் இதுவரை 671927 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் மகிந்த விடுக்கும் கோரிக்கை

மின்சாரக் கட்டணத்தை கணிசமான சதவீதத்தினால் அதிகரிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலம் முழுவதும் வரி மற்றும்…

டொலரொன்றிற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 2 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படுவதை இலங்கையின் மத்திய வங்கி ஜனவரி 1 ஆம் திகதி முதல் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம்…

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி ரணில் வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் விரையில் நிலையான பலத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பளத்தில் வரி செலுத்தல், வற் வரி போன்ற பொருளாதாரத்தை மீட்பதற்காக நடவடிக்கைகளினால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில்…

22,000 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு – கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க…

15 வயது சிறுமி மாயம் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

தெல்தெனிய பிரதேசத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சிறுமி கெங்கல்ல, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார்…

எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை அண்மையில் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு…

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா மீண்டும் உறுதியளித்துள்ளது!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா உறுதியளித்துள்ளது. அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு…

சீனாவை அச்சுறுத்தும் கோவிட் திரிபு இலங்கையில்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கோவிட் தொற்று பரவல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் பரவி வரும் கோவிட் திரிபானது இலங்கையில் பல மாதங்களாக காணப்படுவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்படும் திரிபு சீனாவில் பெருமளவு மக்களிற்கு…