Category: பிரதான செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்…

உக்ரைன் போரில் இதுவரை 19ஆயிரம் பேர் பாதிப்பு: ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம்!

உக்ரைனில் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கிய போரில் இருந்து கிட்டத்தட்ட 19,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதில் 7,199 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11,756 பேர் காயமடைந்தனர். கனரக…

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக இணைக்கும் அரசாங்கம்!

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில்…

இலங்கையில் வங்கிகளின் பணப்புழக்க நிலை! மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ள விடயம்

வங்கித் தொழிலை பாதுகாப்பதற்கு நாம் இருக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்க விரும்புவதாக இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (20.02.2023) தொழில்சார் வங்கியாளர் சங்கங்களின் 33ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இடம்பெற்றிருந்தது. இதில்…

ஆரம்பமாகியது இன்றைய தினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 24ஆம் திகதி வரை முன்னெடுக்க நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம்…

இலங்கையின் மின்சார உற்பத்தி செலவு தொடர்பில் இந்திய மின்சக்தி அமைச்சு கூறியுள்ள விடயம்

இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என இந்திய மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் இந்திய மின்சக்தி அமைச்சு இந்த தகவல் வெளியிட்டுள்ளது. இந்த…

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை 2023ஆம் கல்வியாண்டுக்குரிய உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இவ்வருடம் நிறைவடைவதற்கு…

நீர் கட்டணமும் அதிகரிக்கிறது

நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை வேறு தெரிவுகள் இல்லை எனவும்…

தேர்தல் ஆணைகுக்ழு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ள அறிவிப்பு !

தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம், அந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவருக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் கடமைகளுக்கான மேலதிக வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பிரதான அலுவலகம்…

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979ஆம் ஆண்டின் இல 61இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…