Category: இலங்கை

வலி. வடக்கில் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பு!

யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், குறித்த காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.…

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயது இளம் போதை வியாபாரி கைது

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு நகர் பகுதி அரசடியைச்சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி ஒருவரை 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை (ஜனவரி,1) பிற்பகல் ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கைது…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின்…

பேரினவாதிகளுக்கு அஞ்சி, கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் பதத்தை நீக்கியவர்களை எப்படி சமூகத்தின் பேச்சாளர்களாக அங்கீகரிக்க முடியும்?- கேள்வி எழுப்புகிறார் தவிசாளர் அப்துல் மஜீத்

(எம்.எம்.அஸ்லம்) பௌத்த சிங்கள கடும்போக்குவாதிகளின் கூக்குரலுக்கு அஞ்சி, தமது கட்சிப் பெயரில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை நீக்கிக் கொண்ட சில கட்சிகளை முஸ்லிம் சமூகத்தின் பேச்சாளர்களாக எப்படி அங்கீகரிக்க முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இணைந்த…

உடல்நிலையில் முன்னேற்றம்; வீடு திரும்பினார் சம்பந்தன்!

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் உறுதிப்படுத்தியுள்ளார். வழமையான பரிசோதனைக்காகவே இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுகயீனம் காரணமாக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட இரா.சம்பந்தன்…

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி விரைவில் கிடைக்கும் – அமெரிக்க தூதுவர்

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவிகள் அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உறுதியளித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போதே அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். கடன் மறுசீரமைப்பு…

உள்ளூராட்சி தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரல், கபே, சி.எம்.ஈ.வி உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா…

கொழும்புபில் ஆரம்பித்த  இலங்கையை சுற்றுவரும் கால்நடை பயணத்தை ஆரம்பித்த சுகத் பத்திரன மட்டக்களப்பை சென்றடைந்தார்

(கனகராசா சரவணன்) மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக் மருத்துவ மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கில் நடைபயணமாக இலங்கையை சுற்றியவரும் நடைபயணம் கடந்த டிசம்பர் 31…

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் தேர்தல் பணிகள் தொடரும்! நிமால் புஞ்சிஹேவா

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தேர்தல் பணிகள் தொடரும் என ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கைவிடப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை நடத்துவதற்காக கோரப்பட்ட…

இலங்கை அதிரடி படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட ஆபத்தான பெண்

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் ஒருவரிடம் இருந்து 4 கூரிய…