Category: இலங்கை

இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டம் தேவையில்லை! யாழில் போராட்டம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும், பொருளாதாரம் பின்னடைவை அடைந்துள்ள இந்த நிலையிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இந்த…

13 ஐ எதிர்ப்பவர் மாகாண சபையின் ஆளுநர்- அனுராதா யஹம்பத்திற்கு சாட்டையடி கொடுத்த சித்தார்த்தன்

13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் ஆளுநராக பதவி வகித்துக்கொண்டு 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தக்கூடாதென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவிப்பது வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார். 9வது…

தேர்தலுக்கு எதிரான மனுவின் விசாரணை திகதி ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பௌத்த பிக்குகள் எரித்தது 13ஐ அல்ல, ஒட்டுமொத்த நாட்டை

பௌத்த பிக்குகள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையே எரிக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார். பாராளுமன்ற…

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இந்த விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாடுகள்…

ஒலுவில் துறைமுகத்தில் ரின்மீன் தொழிற்சாலை!

உள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அம்பாறை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள ரின்மீன் உற்பத்தித்தொழிற்சாலையை தனியார் முதலீட்டாளர் ஊடாக புனரமைத்து மீண்டும் இயங்கச் செய்து உற்பத்தியை…

சம்மாந்துறையில் 45 நாட்களாக பாடசாலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள் – முறைப்பாடுகள் செய்தும் இதுவரை தீர்வில்லை; உண்ணாவிரதத்திற்கு தயாராகும் மாணவர்களின் பெற்றோர்கள்

(எம்.வை.அமீர், ஏ.எல்.எம். ஷினாஸ் , எம்.ஐ.எம்.சம்சுத்தீன், ஏ.எல்.அன்சார்) அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஜமாலியா வித்யாலயத்தில் கல்வி கற்கும் ஒன்பது மாணவர்கள் கடந்த 45 நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாமல் தமது கல்வியை இழந்த நிலையில் நிர்கதியாகியுள்ளனர். இந்த மாணவர்களின்…

லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5KG எடையுடைய லாஃப் சிலிண்டர் ஒன்றின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடான், அதன் புதிய விலையாக 2,112 ரூபா…

தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா சிங்கள தேசத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்

தமிழர்களுடைய அரசியல் தீர்வை அங்கீகரிப்பதற்கு சிங்கள தேசம் தயாராக உள்ளதாக என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள்சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று…

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (03) திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தியின்…