Category: பிரதான செய்தி

இந்தியாவின் மூன்றாம் கட்ட உதவியாக 22 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு

இந்தியாவின் மூன்றாம் கட்ட உதவியாக 40000 MT அரிசி, 500 MT பால்மா மற்றும் 100 MT க்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் அடங்கிய 22 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

எரிபொருள் வரிசையில் அதிகரிக்கும் மரணங்கள்

எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன்படி, மாத்தளை எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த மரணம் சம்பவித்துள்ளது. இரண்டு நாட்களாக காத்திருந்து மரணம் குறித்த…

கோவிட்-19 இன் 4 ஆவது தடுப்பூசியை விரைவுபடுத்த சுகாதார அமைச்சகம் முடிவு

COVID-19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த 4 வது பூஸ்டர் டோஸின் நிர்வாகத்தை விரைவுபடுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் 4 ஆவது டோஸ் தடுப்பூசி இயக்கத்தை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக…

லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்!

எதிர்வரும் புதன்கிழமை முதல், மேல்மாகாணத்தில் வழமை போல, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனைச் செய்யப்படும் என அறிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், முகவர்களிடம் கொள்வனவு செய்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

100 நாட்களின் பின் இன்று ஜனாதிபதி செயலகப் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த செயலகத்தின் பணிகள் 100 நாட்களின் பின்னர் இவ்வாறு மீள முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தப் பகுதியில்…

QR முறை ஒத்திவைப்பு!

தேர்ந்தெடுக்கப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டும் இன்று (25) எரிபொருள் விநியோக அட்டை முறை அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போதைய…

எனது முதன்மையான இலக்குகள் -பொருளாதார பிரச்சனைக்கும், இனப்பிரச்சனைக்கும் தீர்வு காண்பது -ஜனாதிபதி ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண்பேன். அதைத் தொடர்ந்து எனது பதவிக் காலத்துக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன் என்றுஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்புச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.…

முகக் கவசம் அணிவது அவசியம் – புதிய வைரஸ் பரவுகிறது!

தற்போது பரவி வரும் புதிய வகையான வைரஸை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமம் என்பதாலும், உயிருக்கு ஆபத்து என்பதாலும் மக்கள் அவசியம் முக கவசங்களை அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது டெல்டா வைரசை விட ஐந்து மடங்கு சக்தி…

போர் குற்றத்துக்காக கோட்டாவை கைது செய்ய குற்ற முறைப்பாடு சமர்ப்பிப்பு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு கோரி தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தலைமையிலான, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள், சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்ற…

இலங்கை தற்போது குரங்கு காய்ச்சல் தொடர்பான தீவிர எச்சரிக்கையுடன்

இலங்கையும் குரங்கு காய்ச்சல் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்நாட்டு மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறையான வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். குரங்கு காய்ச்சல் உலக…